×

சீன சுரங்கத்தில் சிக்கி 8 பேர் பலி: மேலும் 8 தொழிலாளர்கள் மாயம்

ஹெனான்: சீனாவில் செயல்படும் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 8 பேர் பலியான நிலையில், மேலும் 8 தொழிலாளர்கள் மாயமானதால் தேடும் பணி நடைபெறுகிறது. சீனாவின் ஹெனான் மாகாணத்திற்கு உட்பட்ட பிங்டிங்ஷான் நகரில் நிலக்கரிச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களின் நிலைமை குறித்த அச்சம் நிலவுகிறது.

இதுகுறித்து பிங்டிங்ஷான் தியனன் நிலக்கரி சுரங்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘நிலக்கரி சுரங்கத்தில் மொத்தம் 425 பேர் பணியாற்றி வந்தனர். சுரங்கத்திற்குள் ஏற்பட்ட திடீர் விபத்தில் 8 பேர் பலியாகினர். 8 பேரை காணவில்லை. 380 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை தேடி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சீன சுரங்கத்தில் சிக்கி 8 பேர் பலி: மேலும் 8 தொழிலாளர்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Henan ,China ,Pingdingshan City, Henan Province, China ,Dinakaran ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன